சூடான் ஏப்ரல், 29
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவிரி திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கப்பல்கள், விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மோதல் நடக்கும் இடத்திலிருந்து 2000 இந்தியர்கள் வரை பாதுகாப்பாக அழைக்கவரப்பட்டதாகவும், ஒவ்வொரு இந்தியரையும் பத்திரமாக மீட்பதே நோக்கம் என்றும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.