சவூதி அரேபியா ஏப்ரல், 27
போர் நடக்கும் சூடானில் இருந்து ‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தின் மூலமாக முதற்கட்டமாக 360 இந்தியர்கள் விமான மூலம் மீட்கப்பட்டனர். சவூதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்திலிருந்து 360 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானப்படை விமானம் நேற்று இரவு டெல்லி வந்து அடைந்தது. இதைத்தொடர்ந்து நாடு திரும்பிய இந்தியர்களை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் வரவேற்றார்.