திருச்சி ஏப்ரல், 29
மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற SDPI கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து மாவட்ட தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணல் கடத்தல் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்து கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்க, பட்டு, மணல் கடத்தல் மற்றும் போதை கும்பலை தடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கிடவும், தொழிலாளர் உழைப்பை சுரண்டும் 12 மணி நேர வேலை திருத்த சட்டத்தை மேல் நடவடிக்கைகள் இன்றி, தற்காலிகமாக மட்டும் நிறுத்தி வைக்காமல் உடனடியாக அச்சட்டத்தை தமிழக அரசு முழுமையாக வாபஸ் பெறுவது, மேலும் வர கூடிய மே – 5 அன்று திருச்சியில் நடைபெற இருக்கும், SDPI கட்சி வர்த்தகர் அணியின் முதல் மாநில மாநாட்டினை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.