புதுடெல்லி ஏப்ரல், 26
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் ரேடியோ மூலம் மன் கீபாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதுவரை 99 நிகழ்ச்சியில் பேசியுள்ள நிலையில் வரும் 30ம் தேதி நூறாவது நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து ட்வீட் செய்த மோடி உங்களைப் போலவே 100வது எபிசோடுக்கு நானும் காத்திருக்கிறேன் என்று உள்ளார் முன்னதாக மன் கீபாத் நிகழ்ச்சியை 100 கோடி இந்தியர்கள் கேட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.