சென்னை ஏப்ரல், 24
மே மாதம் 1 ம் தேதி உழைப்பாளர்கள் தினம் என்பதால் தமிழ்நாடு அரசு அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. ஏற்கனவே புனித வெள்ளியை முன்னிட்டும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் தமிழ்நாடு மக்களின் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை குதூகளித்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் ஏப்ரல் 29, ஏப்ரல் 30, மே 1 என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.