புதுடெல்லி ஏப்ரல், 21
உலகம் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு புத்தரின் போதனைகளை தீர்வு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற உலக பௌத்த உச்சி மாநாட்டில் தொடக்க விழாவில் பேசிய அவர், போர், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், பொருளாதார நிலையற்ற தன்மை போன்ற பல சவால்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் புத்தரின் போதனைகளை பின்பற்றி உலக நலனுக்காக இந்தியா பாடுபடுகிறது என்றார்.