சென்னை ஏப்ரல், 19
மத்திய அரசின் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த தேர்வுடன் சேர்த்து SSC MTS & CHSLE தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடக்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ட்விட்டரில் பகிர நன்றி கூறிய ஸ்டாலின், மற்ற மத்திய அரசு தேர்வுகளிலும் இந்த முடிவுகள் எடுக்கப்படும் என நம்புவதாக கூறியுள்ளார்.