சென்னை ஏப்ரல், 19
தமிழ்நாட்டில் பேறுகால தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு லட்சம் தாய்மார்களுக்கு 54 பேர் மட்டுமே உயிரிழக்கும் சூழல் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அது குறைக்கப்படவில்லை தாய்மார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.