மும்பை ஏப்ரல், 19
மூன்று ஆண்டுகளில் தனது பங்குதாரர்களுக்கு 200% லாபத்தை டாடா கம்யூனிகேஷன் வழங்கியுள்ளது. ஏப்ரல் 17, 2020 அன்று ரூ.370.80 ல் முடிவடைந்த பங்கு அமர்வில் ரூ.1,212.55 க்கு வர்த்தகமாகி அதிக வருவாய் ஈட்டியுள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் டாடா கம்யூனிகேஷன் பங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது. பங்கு சார்பு வலிமை குறியீடு 60.8% ஆக உள்ளது.