சென்னை ஏப்ரல், 18
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்க கோரி பிரதமருக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியர்களுக்கு உதவிட தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என நான் சார்ந்திருக்கும் திமுகவின் கோரிக்கையை மீண்டும் ஒருமுறை பதிவு செய்ய உங்களுக்கு நான் கடிதம் எழுதுகிறேன். இதே கோரிக்கையை இரு அவைகளிலும் முன் வைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.