சென்னை ஏப்ரல், 18
உளுந்தூர்பேட்டையில் காலணி அமைக்க தமிழ்நாடு அரசுடன் தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வீரர்களுக்கான பிரத்தியேக ஷூக்களை தயாரிக்கும் தைவான் நிறுவனமான ‘போ சென்’ ரூ. 2,300 கோடி முதலீட்டில் ஆசனூர் சிட்கோ வளாகத்தில் இந்த ஆலையை அமைக்க உள்ளது. போ சென் ஆலையில் பணியமர்த்த படவுள்ள 20,000 பேரில் சுமார் 78% பெண்களின் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.