சென்னை ஏப்ரல், 16
அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி ஏப்ரல் 17 முதல் 28 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. மேலும் 1 முதல் 9 ம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்யவும்.