துபாய் ஏப்ரல், 15
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிட்டி கார்டன் ஹோட்டலில் சமூக ஆர்வலர் ENG குரூப் உஸ்மான் அலி ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ரேடியன்ட் ஸ்டார் நிறுவனத்தின் நிறுவனர் ஆபித் ஜுனைத், அமீரகத்தைசேர்ந்த அப்துல்காதர் கம்லி, முஹம்மது அல் காதிரி, ஜெஸ்டிக்கா நிறுவனர் நிதா அல் மஸ்ரி, அன்வர் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் அன்வர், கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தொழிலதிபர் மலிகுர் ரஹ்மான், ஜெஹபர் பிரின்டிங் பிரஸ் ஷா, தமிழ் தேசிய நாளிதழ் தினகுரல் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, கார்டன் சிட்டி ஹோட்டல் நிறுவனர் இல்லியாஸ் அஹமத், மலபார் கோல்டு பொதுமேலாளர் சாக்கோ, எமிரேட்ஸ் பீர் முஹம்மது உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.