புதுடெல்லி ஏப்ரல், 14
டெல்லியில் மத்திய அமைச்சர் எல் முருகன் இல்லத்தில் நடந்த தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது மோடி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறியதோடு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை நினைவு கூர்ந்தார். மேலும் உலகின் பழமையான மொழி தமிழ். ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுவதாகவும், பல சாதனை தமிழர் பற்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாகவும் கூறினார்.