புதுடெல்லி ஏப்ரல், 13
71 ஆயிரம் பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு உரிய அரசு வேலை வழங்கும் வகையில் ரோஸர் மேளா எனும் திட்டம் தொடங்கப்பட்டு அரசு வேலை வழங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் 10 லட்சம் இளைஞர்களுக்கு பணி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 71 ஆயிரம் பேருக்கு காலை 10:30 மணி அளவில் காணொளி வாயிலாக ஆணையை வழங்குகிறார் பிரதமர் மோடி.