சென்னை ஏப்ரல், 10
கனிம வளங்களை சுரண்டுகிற எந்த நடவடிக்கையும் அனுமதிக்க மாட்டோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக இந்திய ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றார்.