புதுடெல்லி ஏப்ரல், 7
வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை இதை இணைப்பதற்கான காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண்ணை அளிக்க அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காதவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.