சென்னை ஆகஸ்ட், 14
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மதுரை மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
எனவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.