ரஷ்யா ஏப்ரல், 4
ரஷ்யாவின் காம்சட்கா பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.