சென்னை ஏப்ரல், 1
அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்று UIDAI அமைப்பு கூறுகிறது. இந்நிலையில் பிப்ரவரியில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. UIDAI இதுவரை மொத்தமாக 90 கோடி பேர் அதனை மொபைல் என்னுடன் இணைத்ததாகவும் கூறப்படுகிறது. 1700 க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களின் பயனாளிகளை தேர்வு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.