சென்னை ஏப்ரல், 1
தமிழகத்தில் இதுவரை 97 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பேரவையில் இது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார் இதற்கு, பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 97 கடைகள் மூடப்பட்டுள்ளன. 173 கடைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.