கோவை ஏப்ரல், 1
கேரளாவில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.109.98 ஆகவும் டீசல் விலை ரூ.98.52 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் ரூ.103.53 க்கும் டீசல் ரூ.95.17 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழக கேரள எல்லையான நாகர்கோவில், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் அதிக அளவில் விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.