பாகிஸ்தான் ஏப்ரல், 1
பாகிஸ்தான் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவரும் வேளையில் கராச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.