சவூதி அரேபியா மார்ச், 29
இஸ்லாமியர்களின் புண்ணிய ஸ்தலமான மெக்காவுக்கு சென்ற யாத்திரிகர்கள் 20 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சவூதி அரேபியாவின் அகபா ஷார்பகுதியில் இருந்து மெக்காவுக்கு இன்று 50க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களோடு பயணித்த அந்த பேருந்து திடீரென விபத்தில் சிக்கியது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்ததாக தெரிகிறது.