ஈரோடு மார்ச், 29
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி வெப்பம் பதிவானது. அடுத்ததாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 டிகிரி, மதுரை 39 டிகிரி, திருச்சி 37.9 டிகிரி, சேலம் 37 டிகிரி, கோவை 37.1 டிகிரி, நாமக்கல் 37 டிகிரி, என வெயில் வாட்டி எடுத்தது. சென்னையில் வெப்பம் 33.8 டிகிரியாக பதிவானது.