சென்னை மார்ச், 29
சின்ன கண்ணன் அழைக்கிறான், புத்தம் புது காலை, அழகிய கண்ணே, இளையநிலா பொழிகிறதே ஆகிய பாடல்களில் புல்லாங்குழலால் மாயம் செய்திருக்கும் சுதாகர் இயற்கை எய்தினார். இளையராஜாவின் குழுவில் அருண்மொழி இணையும் வரை அவரது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர் சுதாகர். இளையராஜாவின் நத்திங் பட் விண்ட் உள்ளிட்ட ஆல்பகளுக்கும் சுதாகர் தான் புல்லாங்குழல் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.