சீன மார்ச், 29
இந்தியா-சீனா எல்லை அருகே 875 கிலோ மீட்டர் தூரத்திற்கு 37 சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லடாக், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அசாம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த கட்டமாக 37 புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 70% அருணாச்சலப்பிரதேசத்தில் அமைய உள்ளது.