சென்னை மார்ச், 23
நீரை வீணாக்காமல் பாதுகாப்பாக பயன்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நீர் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட அவர், உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தண்ணீர் முக்கியமானது. நம்மை காக்கும் தண்ணீரை நாம் தான் காக்க வேண்டும். நீரை வீணாக்காமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தண்ணீரை காத்து தாய் நிலத்தை காப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.