தஞ்சாவூர் மார்ச், 22
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. எனவே வெளியே செல்வோம் குடை ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.