தர்மபுரி மார்ச், 21
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி யூனியன், பாகலஅள்ளி பஞ்சாயத்தில், 15-வது நிதிகுழு மானிய திட்டத்தில், குரும்பட்டி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும், பட்டகப்பட்டி கிராமத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டிலும் குடிநீர் தட்டுபாடுயின்றி சீரான முறையில் கிடைக்கும் வகையில், அனைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை தர்மபுரி சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், பாகல அள்ளி பஞ்சாயத்து தலைவர் முருகன், மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய தலைவர் சிவபிரகாசம், மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.