Spread the love

கடலூர் மார்ச், 21

பொது இடங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பேனர்கள் வைப்பதால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் அவ்வப் போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர்.

மேலும் கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அதன் மூலம் உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *