கோவை மார்ச், 20
கோவையில் நாய்கள் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 13 நாய்கள் எரிந்து சாம்பல் ஆனது. இரண்டு பேர் சேர்ந்து வடவள்ளி கருப்பராயன் கோயில் பகுதியில் விற்பனைக்காக நாய்கள் வளர்த்து வந்தனர். இந்த பண்ணைக்கும் மர்ம நபர்கள் தீவைத்ததில் 13 நாய்கள் இறந்தன. ஒரு நாய் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.