சென்னை மார்ச், 20
2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்துடன் நாளை தொடங்குகிறது. இதில் மின் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதன்படி தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மாதம் ஒருமுறை மின் கணக்கீடு முறை, மின்சார முறைகேடு, மின் இழப்பு போன்றவற்றை தடுக்க அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.