அமெரிக்கா மார்ச், 16
அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள H -1 B பிசா வைத்திருப்பவர்களுக்கு மாற்று வழியை கொண்டு வர அந்நாட்டு அதிபர் ஆலோசனை குழு முயன்று வருகிறது. தற்போதுள்ள விசா சலுகை காலத்தை 60லிருந்து 150 நாட்களுக்கு நீட்டிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த அவகாசம் கிடைத்தால் புது வேலை, மாற்று யோசனைகள், நிவாரணம் உள்ளிட்டவைக்கு கூடுதல் நேரம் கிடைக்கும்.