Spread the love

கடலூர் ஆகஸ்ட், 13

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உடல் நலமும், மனநலமும் மேம்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அமுதவள்ளி வரவேற்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இதில், வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

இதில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி உரையாற்றுகையில், போதை பொருளால் தனி நபர் மட்டும் பாதிக்கப்படவில்லை, அது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் இதனை கைவிட உறுதி கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், மாவட்ட கல்விக்குழுதலைவர் சிவக்குமார், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், துணை தலைவர் சுப்பராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *