கடலூர் ஆகஸ்ட், 12
போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போதை பொருட்கள் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க போதை தடுப்பு புகார் எண் 7418846100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய புகார் எண்ணில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் போதை குற்றங்கள் சம்பந்தமான படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்-அப் மூலமாகவும் பதிவு செய்யலாம். புகார் தெரிவித்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்கள் சம்பந்தமாக புகார் தெரிவிக்கும் புகார்தாரர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். மேற்க்குறிப்பிட்டுள்ள தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.