ஈரோடு பிப், 18
ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் வாக்குகள் பெறும் பணி நிறைவடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக 80 வயதுக்கு மேற்பட்ட 344 பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. 351 பேர் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த நிலையில் 344 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். தபால் வாக்கு செலுத்தாதவர்களிடம் பிப்ரவரி 20 ல் மீண்டும் தபால் வாக்கு பெற திட்டம் விடப்பட்டுள்ளது.