மயிலாடுதுறை ஆகஸ்ட், 13
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை நடத்திய ஹெல்மெட் அணிதல் மற்றும் போதை எனக்கு வேண்டாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மினி மாரத்தானில் தருமை ஆதீனம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முப்பது பேர் கலந்து கொண்டனர். இதில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர் விஸ்வா இரண்டாம் இடம் பிடித்து பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் பெற்றார். மேலும் 11 ம் வகுப்பு பயிலும் மாணவி தாட்சாயணி ஆறாம் இடம் பெற்றுள்ளார்.