ஈரோடு பிப், 9
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 24ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவுக்கு ஆதரவாக பாஜகவினர் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளனர். திமுகவும் நட்சத்திர பரப்புரையாளர்களை களம் இறங்குகிறது இதனால் வரும் நாட்களில் அரசியல் களம் பரபரப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.