புதுச்சேரி பிப், 6
டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சென்று சந்தித்தார். அப்போது தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து தெலுங்கானா, புதுச்சேரி வளர்ச்சி திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.