திருப்பதி பிப், 4
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ₹50 கோடியில் நவீன தானியங்கி லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி, லட்டு தயாரிக்கும் நவீன இயந்திரங்கள் மூலம் தினமும் பக்தர்களுக்கு ஆறு லட்சம் லட்டுகள் தயாரித்து தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும் என்றார்.