ஜோராபடக் பிப், 1
ஜார்க்கண்ட் அருகே ஜோரா படக்பகுதியில் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். படு காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு 50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.