சென்னை பிப், 2
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இதுவரை 2.49 கோடி பேர் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் ஆதாரை இணைக்கும் படி கேட்டுக் கொண்டார். 100% ஆதார் இணைப்பு என்ற இலக்கை அடைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பிப்ரவரி 15க்கு பின் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.