சென்னை பிப், 1
பிப்ரவரி 1 முதல் 3 நாட்களுக்கு சரக்கு லாரிகள் நிறுத்தப்படும் என தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பதால் கனிம வள டெண்டர் எடுத்தவர்களை சொந்தமாக லாரிகள் வாங்கி முறைகேடாக கனிம வளங்களை கொள்ளையடிக்கின்றனர். இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ட்ரைக் நடத்தப்படுகிறது.