ஈரோடு ஜன, 31
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி ஏழாம் தேதி கடைசி நாளாகும். எட்டாம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.
வேட்பு மனுக்களை திரும்ப பெற பத்தாம் தேதி கடைசி நாள். இந்த தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, நாதக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.