புதுடெல்லி ஜன, 29
புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 15 ஏக்கர் பரப்பளவில் முகலாயர்களின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது முகல் தோட்டம். இத்தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என பெயர் மாற்றம் செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலக பத்திரிக்கை இணைச்செயலாளர் நாவிகா குப்தா தெரிவித்துள்ளார். இந்த பெயரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று அறிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.