புதுடெல்லி ஜன, 27
வரும் பிப்ரவரி 1 ம்தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் மத்திய பட்ஜெட் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே டிஜிட்டல் பட்ஜெட்டாக இருக்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக 2021ல் காகிதம் இல்லாமல் டிஜிட்டலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அது முதல் பட்ஜெட் டிஜிட்டல் ஆகவே தாக்கல் செய்யப்படுவதால் இது தொடர்பான தகவலை யார் வேண்டுமானாலும் அலைபேசியிலேயே தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.