புதுடெல்லி ஜன, 26
நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் முக்கிய இடங்கள் மூவர்ண விளக்குகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதன்படி உச்ச நீதிமன்றம், சென்னை மாநகராட்சி கட்டிடம், ஹைதராபாத்தில் உள்ள சார்மினார், ராஜஸ்தானில் உள்ள அரசு அலுவலகங்கள், ஜம்மு காஷ்மீரில் கடிகார கோபுரம், புதுச்சேரி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள முக்கிய இடங்கள் மூவர்ண ஒளியில் ஜொலிக்கின்றன.