Spread the love

மயிலாடுதுறை ஜன, 18

மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது. தேர்பவனி மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய ஆண்டு திருவிழா, கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *