சென்னை ஜன, 18
காணும் பொங்கல் முன்னிட்டு சென்னை கடற்கரை பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் குப்பைகளும் அதிக அளவில் குவிந்து இருக்கும் இதனை அகற்ற சென்னை மாநகராட்சி கடற்கரைகளில் கூடுதல் தூய்மை பணியாளர்களின் நியமிக்க திட்டமிட்டுள்ளது. மெரினா, எலியட்ஸ், பாலவாக்கம், நீலாங்கரை அக்கரை ஆகிய பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.